திவாலான GoFirst விமான நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் SpiceJet., வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி
திவாலான GoFirst விமான நிறுவனத்தை கைப்பற்ற விரும்புவதாக SpiceJet உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான GoFirst, நிதிச் சிக்கல்களால் திவாலாகும் நிலையில் உள்ளது. இந்நிறுவனம் நீண்ட காலமாக நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான நிதியை திரட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், GoFirst விமான நிறுவனம் தற்போது கடன் வழங்குநர் குழுவின் கீழ் உள்ளது.
இந்நிலையில், மூன்று பாரிய நிறுவனங்கள் சமீபத்தில் Go Firstஐ வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு Go First நிறுவனத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் டெண்டர்களை சமர்ப்பிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான டெண்டர்களை சமர்பிக்க 2023 நவம்பர் 22ம் திகதி கடைசி நாளாக இருந்தது. ஆனால், அதுவரை எந்த நிறுவனமும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், காலக்கெடு முடிந்த பல வாரங்களுக்குப் பிறகு, மூன்று நிறுவனங்கள் திடீரென விமான நிறுவனத்தை கையகப்படுத்த விருப்பம் தெரிவித்தன.
முதல் நிறுவனம் Sky One, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் Sharjahவை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இரண்டாவது நிறுவனம் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட நிதி முதலீட்டு நிறுவனமான Safric Investments ஆகும்.
மூன்றாவதாக, இன்று (டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை) நாட்டின் பிரபல விமான நிறுவனமான SpiceJet நிறுவனமும் GoFirst-ஐ வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முன்மொழிவுகள் குறித்து GoFirst-ன் கடன் வழங்குநர்களுக்கு இடையேயான விவாதங்கள் தொடங்கியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்திக்குப் பிறகு, SpiceJet பங்குகள் 5%க்கும் அதிகமாக வலுப்பெற்று ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.69.20ஐ எட்டியது.
GoFirst நிறுவனத்துடன் இணைந்து வலுவான விமான சேவையை உருவாக்க உதவும் என்று SpiceJet நிறுவனம் நம்புகிறது. இதனால், இந்திய மதிப்பில் ரூ.2,254 கோடி மூலதனத்தை திரட்ட SpiceJet வாரியம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. நிதி நிறுவனங்கள், FIIக்கள், HNIக்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு அதன் பங்குகளை விற்பதன்மூலம் இந்த நிதியை SpiceJet நிறுவனம் திரட்டவுள்ளது.
Go First அதன் கடன் வழங்குநர்களுக்கு ரூ. 6,521 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Go First Airlines விமானங்கள் மே 3, 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக மே 2 அன்று Go First தெரிவித்திருந்தது. அப்போதிருந்து, இன்றுவரை விமான சேவையை நிறுத்தும் திகதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian airline SpiceJet, bankrupt Go First, SpiceJet interested interest to acquire Go First, Go First airlines bankrupt