வாயில் இருந்து வெளியே வரும் பெரிய சிலந்தி! காண்போரை அச்சுறுத்தும் திகில் வீடியோ
கலிபோர்னியாவில் ஒருவர் தனது வாயில் இருந்து சிலந்தி ஒன்றை வெளியே எடுக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
கலிபோர்னியாவில் வசித்து வருபவர் ஜெய் ப்ரூவர். இவர் ஊர்வன மிருகக்காட்சியில் நிறுவனராக பணி புரிந்து வருகிறார். தற்போது இவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் ஜெய் ப்ரூவர் தனது வாயில் ஒரு பெரிய கருநிறத்தில் ஆன சிலந்தி ஒன்றை வாயில் இருந்து வெளியே எடுக்கின்றார். இவர் இது போன்று பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும், யூடியூப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் பகிர்ந்த வானவில் நிற பாம்பு பலரின் கவனம் ஈர்த்தது. பார்ப்பதற்கு மேற்பட்ட வண்ணத்தில் உள்ள இந்த பாம்பு இணையவாசிகள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஜெய் ப்ரூவர் இதுபோன்ற நம்பமுடியாத வீடியோக்கள் பலவற்றை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஷேர் செய்வது அவரது வழக்கமாகும். தற்போது வரை சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியாவை பார்வையிட்டுள்ளனர்.