பிரித்தானியாவில் பல இடங்களில் வானில் தெரிந்த மர்ம ஒளி; மக்கள் குழப்பம்

Balamanuvelan
in ஐக்கிய இராச்சியம்Report this article
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வாழும் மக்கள், மர்ம ஒளி ஒன்றைக் கண்டதால் குழப்பமடைந்துள்ளார்கள்.
பல இடங்களில் வானில் தெரிந்த மர்ம ஒளி
A time-lapse of the glowing spiral that appeared in the sky over the UK & Europe, said to be caused by frozen fuel released from a SpaceX rocket’s second stage after launch.
— 𝓡𝓮𝓭𝓱𝓪𝓽 𝓣𝓱𝓮𝓸𝓻𝓲𝓼𝓽 (@1337nubcakes) March 25, 2025
The pattern was visible for several minutes before fading. pic.twitter.com/nzO689wkBF
பிரித்தானியாவில், கிரேட்டர் மான்செஸ்டர், டெர்பிஷையர், லன்காஷையர், யார்க்ஷையர், ஸ்டாஃபோர்ட்ஷையர் மற்றும் தெற்கில் சில பகுதிகளிலும் வாழும் மக்கள், வானில் ஒரு விநோதமான ஒளியைக் கண்டுள்ளார்கள்.
🚨🇬🇧 Just spotted in the night sky over the UK by hundreds of different people
— Concerned Citizen (@BGatesIsaPyscho) March 24, 2025
Anyone got a video clip? What on Earth is it? pic.twitter.com/ISD5XXBUCI
வழக்கம்போல அது பறக்கும் தட்டாக இருக்குமோ என சிலர் கேள்வி எழுப்ப, இணையத்தில் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் ஒன்றை செலுத்தியபோது இதேபோன்றதொரு காட்சி வானில் தோன்றியுள்ளது.
அதாவது, ராக்கெட்டிலிருந்து வெளியாகும் கூடுதல் எரிபொருள், உறைந்த நீராவி மேகங்களை உருவாக்கும்போது, அதன் மேல் சூரிய ஒளி பட்டால், இதுபோன்றதொரு தோற்றத்தை அது உருவாக்கும்.
ஆக, இம்முறையும் இந்த விநோத காட்சியின் பின்னால் அமெரிக்கா ஏவிய ராக்கெட் இருக்கலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |