துளசி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஜோதிட சாஸ்திரத்தில் துளசி மாலை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
துளசி செடி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நம்பப்படுகிறது, குறிப்பாக இந்து மதத்தில் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிக்கு பிடித்த செடியாகவும் கருதப்படுகிறது.
வேதங்களின்படி, துளசி லட்சுமி தேவியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. அதுப்போலவே துளசி மாலையும் சிறப்பு வாய்ந்ததாகும். அதை அணிந்துக்கொள்வதால் ஏற்படும் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
துளசி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
துளசியில் ஷ்யாம துளசி, ராம துளசி என இரண்டு வகைகள் உள்ளன. ஷ்யாமா துளசி என்பது ஜெப மாலையாகும். இது அணிவதால் மன அமைதியும், குடும்பத்தில் துன்பம் நீங்கி சந்தோஷம் பெருகும்.
அடுத்தாக ராம துளசி மாலையை அணிவது ஒரு நபரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இதை அணிந்திருப்பவர்கள் அவர்களுடைய கடைமைகளை எப்போதும் சீராக செய்து வருவார்கள்.
துளசி மாலையை கழுத்தில் அணிவதால் உடல் சுத்தமாவதோடு, பல நோய்களும் குணமாகும்.
செரிமான சக்தி, அதிக காய்ச்சல், சளி, தலைவலி, தோல் நோய்கள், மூளை நோய்கள் மற்றும் வாயு தொடர்பான பல நோய்களுக்கு துளசி மாலை நன்மை தருவதாக நம்பப்படுகிறது.
இது தவிர, துளசி மாலை அணிவதால் புகழ், பெருமை மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
துளசி மாலை அணிபவர்கள் பின்பற்ற வேண்டியவை
துளசி மாலையை வாங்கியவுடன் மஞ்சள் நீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
அடுத்து சுத்தமான துணியால் துடைத்து பெருமாளின் படத்திற்கு முன் வைத்து, வழிபட வேண்டும். இதன் பின்னர் மாலை கழுத்தில் அணிந்துக்கொள்ளலாம்.
இதை அணிந்திருப்பவர்கள் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் அணிந்த மாலையை வேறு ஒருவர் அணியக் கூடாது.
துளசி மாலை அணிபவர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
துளசி மாலை புனிதமான பொருள் என்பதால், அதை அணிந்திருப்பவர்கள் கூடிய கவனத்துடன் செயற்பட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |