மரணத் தருவாயிலிருந்த உறவினருடன் இந்தியில் பேசியவர் அமெரிக்காவில் பணிநீக்கம்: இந்தியர் என்பதால் பாரபட்சமா?
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய அமெரிக்கர் ஒருவர், இந்தியாவில் மரணத் தருவாயிலிருந்த தன் உறவினருடன் இந்தியில் பேசியதைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் பேசுவதை ஒற்றுக்கேட்ட வெள்ளையர்
இந்திய அமெரிக்கரான அனில் (Anil Varshney, 78), இந்தியாவில் மரணத் தருவாயிலிருந்த தனது மைத்துனருடன் இந்தியில் பேசுவதை வெள்ளையர் ஒருவர் ஒற்றுக்கேட்டதைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2002ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பெடரல் ஏஜன்சியுடன் பணி செய்துவந்த அனில், அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்ததாரராக 2022வரை பணி செய்துவந்துள்ளார்.
இவ்வளவு காலம் உண்மையாக பணி செய்துவந்த தன்னை திடீரென பணிநீக்கம் செய்ததால் நீதிமன்றம் சென்றுள்ளார் அனில்.
பாதுகாப்பு தொடர்பான ஒரு அலுவலகத்தில், வீடியோ அழைப்பில் பேசியது பாதுகாப்புக் குறைபாட்டுக்கு வழிவகுக்கும் என கூறி அனிலை பணிநீக்கம் செய்துள்ளனர்.
ஆனால், ’Contractor of the Year’ என்பது முதலான விருதுகளை வென்ற அனிலை, அவர் இந்தியில் பேசியதாலேயே, இந்திய அமெரிக்கர் என்ற காரணத்தால் பாரபட்சம் காட்டி பணிநீக்கம் செய்ததாக அனில் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |