spotify-ல் பலரும் எதிர்பார்த்த புதிய அம்சம்! இனி எளிதாக இதை செய்ய முடியும்
Spotifyல் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்பாட்டிஃபை என்பது ஒரு டிஜிட்டல் இசை ஸ்ட்ரீமிங் செய்யும் சேவை ஆகும். பாடல்களை, இசை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்யாமலே இணையத்தில் நேரடியாக கேட்டு ரசிக்கலாம்.
ஓன்லைன் சேவை என்பதால், மற்ற செயலிகள் போலவே உங்கள் கணக்கு, பிளேலிஸ்ட் உள்ளிட்டவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியும். இதில் பிற யூசர்களை நேரடியாக ப்ளாக் செய்ய முடியாது. நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துடன் கோரிக்கை அல்லது புகார் கொடுப்பதன் வழியாகத் தான் ப்ளாக் செய்ய முடியும். ஆனால், இப்போது நேரடியாக உங்கள் ஸ்பாட்டிஃபை கணக்கிலிருந்தே யூசர்களை நேரடியாக ப்ளாக் செய்ய முடியும்.
ஸ்பாட்டிஃபையில் யூசர்களை ப்ளாக் செய்வது குறித்து காண்போம்
ஸ்பாட்டிஃபையில் யூசர்களை ப்ளாக் செய்ய, நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் ஸ்பாட்டிஃபை யூசர் புரோஃபைலுக்கு செல்லுங்கள்.
அந்த யூசரின் பப்ளிக் பிளேலிஸ்ட்டின் மேலே இருக்கும் மூன்று-புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
நீங்கள் மொபைல் சாதனத்தில் ப்ளாக் செய்ய முயற்சி செய்தால், “block” or “block user” (ப்ளாக் அல்லது ப்ளாக் யூசர்) என்பதைத் தேர்வு செய்யவும்.
நீங்கள் ஒரு யூசரை ப்ளாக் செய்தவுடன், அவரால் உங்கள் ஸ்பாட்டிஃபை பக்கத்தையோ, உங்களின் பப்ளிக் பிளேலிஸ்ட்டையோ அல்லது நீங்கள் எந்த பாடல்களை, இசையை கேட்கிறீர்கள் என்று உங்களின் ஆக்டிவிட்டிகளை அக்சஸ் செய்ய முடியாது.
அதே போல, இதற்கு முன்னர் நீங்கள் ப்ளாக் செய்த யூசர்களையும் நீங்கள் தற்போது அன்-ப்ளாக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.