புதிய நெருக்கடி குறித்த அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்... பரவும் பறவைக் காய்ச்சல்
ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், குறைந்தது கடந்த பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் தொடக்க நிலை பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன.
கோடிக்கணக்கான பறவைகள்
கடந்த காலத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோடிக்கணக்கான பறவைகள் கொல்லப்படுவதற்கும் உணவு விலைகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.

முக்கியமாக இடம்பெயரும் காட்டுப் பறவைகள் மூலம் பரவும் இந்த நோய், ஆகஸ்ட் முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை பிரித்தானியாவிலும் 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் 56 எண்ணிக்கையிலான பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன் பெரும்பாலும் போலந்தில் பதிவானது.
கடந்த பத்தாண்டுகளில் இந்த சீசனில் மட்டுமே தொடக்கத்திலேயே 10 நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவுவது இதுவே முதல் முறை. இருப்பினும், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறைவாகும்.
2022ல் ஐரோப்பாவில் மிக மோசமான நிலைக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மொத்தம் 9 ஐரோப்பிய நாடுகளில் 31 பாதிப்புகள் பதிவானது.
வெளியான தகவலின் அடிப்படையில், இந்த வாரம் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் இந்த பருவத்தின் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

பிரான்சில் மேலும் இரண்டு பாதிப்பு சம்பவங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மிக மோசமான நிலை
இதனிடையே, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவாகவே உள்ளது என்றும், பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பண்ணை வாத்துகளுக்கான மூன்றாவது வருடாந்திர பறவைக் காய்ச்சல் தடுப்பூசி நடவடிக்கைகளை பிரான்ஸ் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசியாவையும் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது.

அமெரிக்காவில் 180 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன, இது முட்டை விலைகளைப் பாதித்தது மற்றும் கறவை மாடுகள் மற்றும் மக்களையும் பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கோழி இறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில், கடந்த காலங்களில் மிக மோசமான நிலையை எதிர்கொண்டு, தற்போது பறவைக் காய்ச்சல் இல்லாத நாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |