5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்..!எக்ஸ்ரே படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்து வந்த 5 வயது சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது நுரையீரலில் இருந்த பொருளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
5 வயது சிறுவனுக்கு நிற்காத இருமல்
சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் போனதற்கான அதிர்ச்சியான காரணத்தை மருத்துவர்கள் எக்ஸ்ரே படம் மூலம் கண்டறிந்துள்ளனர்.
The Sun
பராகுவேயில் உள்ள மருத்துவர்கள் சிறுவனை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தி பார்த்த போது, சிறுவனின் இடது நுரையீரலில் ஸ்பிரிங் போன்ற உலோக பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.
இடது நுரையீரலில் ஸ்பிரிங் சிக்கிக் கொண்டதை தொடர்ந்து, 2022 டிசம்பர் முதல் சிறுவனுக்கு இடைவிடாத இருமல் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
இந்நிலையில் 2023 மார்ச் 8ம் திகதி சிறுவனது இடது நுரையீரலில் இருந்து ஸ்பிரிங் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் இடது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஸ்பிரிங் நுரையீரல் திறனை ஏற்படுத்தி இருந்தாலும், இவை நாளடைவில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.