omicron வைரஸை இந்த 2 தடுப்பூசிகளும் எதிர்த்து போராடும்! ரஷ்யா வெளியிட்ட முக்கிய தகவல்
உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் வைரஸ், இப்போது உலகின் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இதனால், இந்த புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வைரஸை தற்போது மக்களுக்கு போட்டு வரும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே சமயம் சில தடுப்பூசி நிறுவனங்கள் இந்த விஷயத்தை கையை விரித்துவிட்டன.
இது போன்ற நிலையில் தான், ரஷியாவின் sputnik V மற்றும் sputnik light ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று ரஷிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், புதிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடக்கூடிய பூஸ்டர்களைத் தயாரிக்க தயாராக உள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிமிட்ரிவ் இது குறித்து கூறுகையில், கொரோனாவின் உருமாற்றத்திற்கேற்ப sputnik V மற்றும் sputnik light ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் கமலேயா நிறுவனம், கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஏற்ப தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸுக்கு எதிரான புதிய ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசியில் பெரிதாக மாற்றம் தேவைப்படாத நிலையில், 45 நாள்களில் ஒமைக்ரானுக்கு எதிராக பெருமளவில் தடுப்பூசியை உருவாக்க முடியும். மாற்றம் தேவைப்பட்டால், பிப்ரவரி 20, 2022-க்குள் ஸ்புட்னிக் பூஸ்டர்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022