நேட்டோ மீது ஆண்டுகளில் அல்ல; மாதங்களில் புடின் தாக்குதல் நடத்தக்கூடும் - உளவுத்துறை எச்சரிக்கை
Western spy cheif warning russia could launch attack within months: ரஷ்யா சில மாதங்களில் நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ஐரோப்பிய உளவுத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய உளவுத்துறை தலைவர்கள், நேட்டோ நாடுகள் மீது ரஷ்யா ஆண்டுகளில் அல்லாமல் மாதங்களிலேயே தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலைவர்களிடையே கவலைகள்
ஐரோப்பியக் கண்டத்திற்கு ரஷ்யாவினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே கவலைகள் அதிகரித்து வருகின்றன.
நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா ட்ரோன் விமானம் அல்லது ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா நடத்தக்கூடும் என்று உளவுத்துறை மதிப்பீடுகள் குறிப்பிடுவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேட்டோ மீது ஆண்டுகளில் அல்ல; மாதங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஐரோப்பிய உளவுத்துறை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரானில் போர்க்கள நிலைமை பெரும்பாலும் தேக்கமடைந்துள்ள நிலையில், சமீபத்திய மாதங்களில் ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா குறிவைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
"ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் இன்னும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும். உக்ரைனுக்கான நமது ஆதரவை நாம் அதிகரிக்க வேண்டும்; ஏனெனில் புடினை திறம்படத் தடுப்பதற்கான ஒரே வழி அவரை வீழ்த்துவதுதான்" என பிரித்தானியாவின் பாதுகாப்பு நிபுணர் பிலிப் இங்க்ராம் தெரிவித்துள்ளார்.
