OpenAI நிறுவனத்தில் ரகசிய உளவு சாதனம்: AI தொழில்நுட்பத்திடம் சிக்கிய முன்னாள் ஊழியர்
Spy Device Found in OpenAI Headquarters Ex Engineer Charged: OpenAI நிறுவனத்தின் உயர்மட்ட கூட்டரங்கில் உளவு சாதனத்தை பொருத்திய குற்றத்திற்காக முன்னாள் ஊழியர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
OpenAI நிறுவனத்தில் உளவு சாதனம்
பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் உள்ள உயர்மட்ட கூட்டரங்கில் உளவு சாதனை பொறுத்தி ரகசிய தரவுகளை திருட முயற்சித்த அந்நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரான சவுதி அரேபியாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அல்ஃபோசான்(Abdul Rahman Alfozan) மீது அமெரிக்க கூட்டாட்சி வழக்கறிஞர்கள் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அப்துல் ரஹ்மான் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் OpenAI நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

நீதிமன்ற ஆவணங்கள் படி, இவர் உயர்மட்ட கூட்டரங்கில் உள்ள டிவியின் USB போர்ட்டில் என்கிரிப்ட் செய்யப்பட்ட ரகசிய பதிவு சாதனத்தை பொறுத்தி நிறுவனத்தின் ரகசிய உரையாடல்களை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மான் ரகசிய உளவு சாதனத்தை பொருத்திய 48 மணி நேரத்தில், OpenAI நிறுவனத்தின் சொந்தமான செயற்கை நுண்ணறிவு மாடலின் உதவியுடன் உளவு சாதனத்தை ஊழியர்கள் கண்டுபிடித்து அகற்றினர். மேலும் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதன் பின்னணியில் இருக்கும் நபரையும் துல்லியமாக கண்டுபிடித்துள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான்
இந்த செயலை அடுத்து அப்துல் ரஹ்மான் அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நிறுவனத்தின் AI தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல்களை திருடுவதே இவரின் முக்கிய நோக்கமாக இருந்து இருக்கலாம் என்று FBI அதிகாரி காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 250000 அமெரிக்க டொலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.