ஐரோப்பாவில் பயிற்சி... இஸ்ரேலுக்காக உளவு வேலை: மரணதண்டனையை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் அதிகாரிகள் மரணதண்டனை நிறைவேற்றியதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
சியோனிச உளவாளி
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான மீதான போர் தொடங்கியதிலிருந்து அறிவிக்கப்பட்ட முதல் மரணதண்டனை இதுவாகும்.

நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த படங்களையும் தகவல்களையும் மொசாட் அதிகாரிகளுக்கு வழங்கி வந்த, சியோனிச ஆட்சியின் உளவாளி ஒருவருக்கான மரண தண்டனை இன்று காலை நிறைவேற்றப்பட்டது என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
கௌரூஷ் கெய்வானி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், ஜூன் மாதம் இஸ்ரேலுடன் ஈரான் நடத்திய 12 நாள் போரின்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளிலும்
அப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, கடைசி கட்டத்தில் அமெரிக்கா குண்டு வீச்சில் ஈடுபட்டது. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் முகவர்களுடனான அவரது சந்திப்புகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டதுடன், அவர் ஆறு ஐரோப்பிய நாடுகளிலும் டெல் அவிவிலும் பயிற்சி பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 28 அன்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்து, அதன் உயர் தலைவர் அலி காமெனியைக் கொன்றன.

இதன் விளைவாக மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவின் இராணுவ முகாம்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் மொத்தமாக அழித்ததுடன், ஈரான் மீதான இஸ்ரேலின் விரோத போக்கு மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |