காவ்யா மாறனை திருமணம் செய்யும் ஆசையை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க ரசிகர்! வைரல் வீடியோ
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர் ஒருவர் திருமண முன்மொழிவை செய்துள்ளார்.
காவ்யா மாறன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணை உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இணையத்தில் மிகவும் வைரலான பெண் என்பதை எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் காவ்யா என்பது புதிய பெயர் அல்ல. ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்டேடியங்களில் காணப்படுவதைத் தவிர, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தின் போது தனது அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஏலப் போரில் கலந்துகொண்டபோது தான் அவர் மிகவும் பிரபலமானார்.
திருமண முன்மொழிவு
காவ்யா மாறனின் ரசிகர் பட்டாளம் தற்போது இந்தியாவை கடந்து வெளிநாட்டிலும் உருவாகிவருகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த SA20 போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணை உரிமையாளர் காவியா மாறனுக்கு ரசிகரிடமிருந்து திருமண முன்மொழிவு வந்துள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிரான்சைஸ் அணியான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிராக பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் வியாழக்கிழமை விளையாடிக்கொண்டிருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்கள் நல்ல தொடக்கத்தைப் பெற, ஒரு கட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அப்போது, "காவ்யா மாறன், நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்ற வாசக அட்டையை கையில் ஏந்தியபடி, கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரை நோக்கி கமெரா திரும்பியது.
Looks like someone needs a bit of help from @Codi_Yusuf on how to propose in the BOLAND. ?#Betway #SA20 | @Betway_India pic.twitter.com/ZntTIImfau
— Betway SA20 (@SA20_League) January 19, 2023
இந்த வீடியோ SA20-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு, சிறிது நேரத்தில் வைரலானது.
தென் ஆப்பிரிக்கா டி20 (SA20)
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் இடையேயான போட்டியைப் பற்றி பேசுகையில், சன்ரைசர்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 18.2 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது. SA20-ன் தொடக்கப் பதிப்பில் ஐந்து போட்டிகளில் காவியா மாறனின் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.
புள்ளிப்பட்டியலில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் முதலிடத்திலும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் இரண்டாவது இடத்திலும் உள்ளன.