உலகின் மிகவும் விரும்பத்தகுந்த தீவாக இலங்கைக்கு விருது
உலகின் மிகவும் விரும்பத்தகுந்த தீவு என இலங்கைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
23வது ஆண்டின் Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கை "உலகின் மிகவும் விரும்பத்தகுந்த தீவு" (Most Desirable Island in the World) என்ற பட்டத்தை வென்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற Wanderlust Travel பத்திரிகை இதனை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை விருதை வெல்லும் வகையில் முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு விருதுகள் 22 பிரிவுகளில் வழங்கப்பட்டு, விருப்பமான நாடுகள், நகரங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களையும் கொண்டாடுகின்றன.
"இந்திய பெருங்கடலின் முத்தாக" அழைக்கப்படும் இலங்கை, தனது வரலாற்று சின்னங்களான சிகிரியா கல் கோட்டை, தம்புள்ளா குகை கோவில்கள், அனுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகியவற்றின் வழியாக கண்கவர் நினைவுச் சின்னங்களைக் கொண்டு வரலாற்றை உயிர்ப்பிக்கின்றது.
மேலும், இலங்கையின் சிறுத்தை நிறைந்த தேசிய பூங்காக்கள், டங்கல்லே மற்றும் திரிகோணமலை கடற்கரை பகுதிகள், தேயிலை தோட்டங்கள், மலைப்பகுதிகள், புதியதாக உருவான பெகோ பாதை (Pekoe Trail) உள்ளிட்டவை நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றுலா இடங்களையும் உலகிற்கு அளிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sri Lanka Island, Sri Lanka awarded Most Desirable Island in the World