U19 உலகக்கோப்பையில் 133 ரன்னுக்கு ஆல்அவுட்! எதிரணியை 56 ரன்னில் சுருட்டி.,மரண அடி கொடுத்த இலங்கை
இலங்கை U19 அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியா U19 அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இலங்கை ஆல்அவுட்
தென் ஆப்பிரிக்காவில் பத்தொன்பது வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இன்று டைமண்ட் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொண்டது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 37.5 ஓவர்களுக்கு 133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய சுபுன் வடுகே 79 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
Innings break: Sri Lanka U19s bowled out for 133. Supun Waduge 56*. Time to defend the target #YoungLions #U19WorldCup pic.twitter.com/Cz9N5I2qDZ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 24, 2024
நமீபியாவின் ஸசியோ வான் வூரன் 4 விக்கெட்டுகளும், ஜோஹன்னஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அபார வெற்றி
பின்னர் நமீபியா அணி களமிறங்கியது. இலங்கையின் விஷ்வா லஹிரு, ருவிஷன் பெரேரா, தினுறா ஆகியோரின் பந்துவீச்சில் சீட்டு கட்டுபோல் விக்கெட்டுகள் சரிந்தன.
இதனால் 27 ஓவர்களில் நமீபியா அணி 56 ஓட்டங்களுக்கு சுருண்டது. Blignaut 18 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கையின் தரப்பில் விஷ்வா லஹிரு, ருவிஷன் பெரேரா தலா 3 விக்கெட்டுகளும், தினுறா கலுபஹன 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Our #YoungLions restricted Namibia to a mere 55 runs in the 2nd #U19WorldCup match, securing a dominant 77-run victory.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 24, 2024
Well done, boys! Keep the winning streak alive. ? pic.twitter.com/Uhdd3le3kj
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |