இலங்கை ராணுவம் நடத்திய கார் பந்தயத்தில் விபத்து., பார்வையாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
மாபெரும் கார் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்த இலங்கை ராணுவம் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்படும் கார் பந்தயம் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது.
நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், இலங்கையின் பொருளாதார நிலை வழமைக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில், சரியாக 5 வருடங்களின் பின்னர் இலங்கை இராணுவம் மீண்டும் கார் பந்தயத்தை ஏற்பாடு செய்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏற்பாடு செய்யப்பட்ட கார் பந்தயத்தை இலவசமாக பார்க்க அனுமதிக்கப்பட்டது.
இந்த கார் பந்தயத்தை எந்த கட்டணமும் இன்றி ஆர்வமுள்ள மக்கள் காண அனுமதிக்கப்பட்டனர்.
இலவச நுழைவு காரணமாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கார் பந்தயத்தைக் காண வந்தனர்.
பந்தயம் தொடங்கிய சிறிது நேரத்தில், உயரமான மற்றும் குறுகிய திருப்பத்தில் கார் ஒன்று பந்தய களத்தில் கவிழ்ந்தது.
அப்போது, மார்ஷல்கள் மற்றும் பிற பணியாளர்கள் மஞ்சள் கொடிகளை பிடித்துக்கொண்டு பின்னால் வரும் கார் ஓட்டுனர்களுக்கு சிக்னல் கொடுத்தனர்.
கவிழ்ந்த காருக்குள் இருந்த டிரைவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
At least seven people were killed and over 20 others sustained injuries when a car went off track and crashed into a group of spectators at the Fox Hill Super Cross race in Diyatalawa.https://t.co/sduSWmVvIP…
— Easwaran Christian Rutnam (@easwaranrutnam) April 21, 2024
via @colombogazette #Srilanka #FoxHill #accident #SLnews pic.twitter.com/dhfa3cNgwY
ஆனால் அதிக தூசி இருந்ததால், கார் கவிழ்ந்து கிடப்பதையும் சிக்னல் காட்டப்படுவதையும் பின்னால் வந்த சில கார்கள் கவனிக்கவில்லை. ஆனால், அருகில் வரும்போது, விபத்து ஏற்படாமல் இருக்க காரை திருப்ப முயன்றுள்ளனர்.
ஆனால் அதிவேகத்தில் வந்த கார்கள் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது மோதியது.
அப்போது அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்த காட்சிகளில் பார்வையாளர்கள் கூச்சலிடுவது பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 දෙනෙකුට මරු කැඳවූ දියතලාව ෆොක්ස් හිල් ධාවන පතයේ මාරක අනතුර!
— humble citizen (@humblecitizen5) April 22, 2024
Video credit to original owner.#viralvideo #diyathalawa #foxhill #latestupdates pic.twitter.com/xQlWbrbIWB
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
sri lanka race crash, sri lanka car race accident