திரிமான்னேவின் ராஜினாமா கடிதம் ஏற்பு: இலங்கை கிரிக்கெட் சிஇஓ புகழாரம்
இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னேவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சிஇஓ ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
திரிமான்னே ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடித்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்தார்.
34 வயதாகும் லஹிரு திரிமான்னே 127 ஒருநாள் போட்டிகள், 44 டெஸ்ட் மற்றும் 26 டி20 போட்டிகளில் 5,543 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
AFP
ராஜினாமா கடிதம் ஏற்பு
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் செயற்குழு கூட்டத்தின்போது திரிமான்னேவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
REUTERS / Action Images
திரிமான்னேவின் ஓய்வு குறித்து சிஇஓ ஆஷ்லி டி சில்வா கூறுகையில், 'திரிமான்னேவின் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க வாழ்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
மேலும் அனைத்து வகையான விளையாட்டுகளையும் உள்ளடக்கிய இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்படும்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |