முதல் முறையாக T10 போட்டித் தொடரை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்! முழு விவரம் உள்ளே
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர் நாடுகளில் முதமுறையாக இலங்கை கிரிக்கெட் T10 போட்டித் தொடரை அறிமுகப்படுத்துகிறது.
லங்கா T10 லீக்
இலங்கை கிரிக்கெட் தனது முதல் T10 போட்டித் தொடரை ‘லங்கா T10 லீக்’ (Lanka T10 league) என பெயரிடவுள்ளது.
சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இதுதொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
GettyImages
T-Ten Global Sports நிறுவனத்துடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள T10 கிரிக்கெட் (Lanka T10) தொடர் 2023 ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள்
இப்போட்டித் தொடர் 12 நாட்கள் நடைபெறவுள்ளது, இதில் 6 ஆண்கள் அணிகள் மற்றும் 4 பெண்கள் அணிகள் பங்குபற்றவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 10 உள்நாட்டு வீரர்களும், 6 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெறவுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜுன் மாதம் Lanka T10 தொடர் கண்டி அல்லது ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து லங்கா பிரீமியர் லீக் T20 (LPL) தொடர் டிசம்பரில் நடைபெறும்.
? SLC launches T10 league for men and women set to start in June next year. ?#LankaT10 #LT10 pic.twitter.com/hvXH6RS16g
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 20, 2022
இலங்கை கிரிக்கெட்
இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா கூறுகையில், உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் பல்வேறு லீக் கிரிக்கெட் போட்டிகளைப் போன்று Lanka T10 கிரிக்கெட் போட்டியிலும் சர்வதேச தரம்வாய்ந்த, புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளதாகவும், அதேபோல Lanka T10 கிரிக்கெட் தொடர் இலங்கையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கான சிறந்த களமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அபுதாபி T10 லீக்
உலகில் முதல்முறையாக 2017-ல் T10 பொடித்த தொடரை அபுதாபி கிரிக்கெட் அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு அதன் 6-வது சீசனை தொடங்குகிறது. Abu Dhabi T10 League எனும் இந்த போட்டி தொடர் நாளை (நவம்பர் 23) தொடங்கி டிசம்பர் 4-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
ஆனால், அபுதாபி ICC-ன் உறுப்பினர் அல்ல என்பதால், இலங்கை அந்த பெருமையை தனதாக்கிக்கொண்டது. ICC-ன் மற்ற உறுப்பு நாடுகளும் மிகவும் வேகமான கிரிக்கெட் வடிவமான Lanka T10 லீக் கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.