இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் நன்கொடை! SLC முக்கிய அறிவிப்பு
அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நாட்டின் சுகாதார துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம்(SLC) தீர்மானித்துள்ளது.
நேற்று (மே 24) கூடிய இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த நன்கொடைக்கு ஒப்புதல் அளித்தது.
இதன்படி, குழந்தைகளுக்கான சிறுவர் பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ‘குழந்தைகளுக்கான Lady Ridgeway மருத்துவமனைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படும்.
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ‘The National Cancer Hospital’ 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
நாட்டிற்கு தேவைப்படும் இந்த தருணத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
அமெரிக்காவை உலுக்கிய டெக்ஸாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு! ஜெலன்ஸ்கி இரங்கல்
மேலும் இந்த சவாலான காலகட்டத்தை முறியடிக்க எமது தேசத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் என இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
அத்தகைய உதவியின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நிதி உடனடியாக நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.