அமெரிக்காவை உலுக்கிய டெக்ஸாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு! ஜெலன்ஸ்கி இரங்கல்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்வத்திற்கு உக்ரைன் அதிபரி ஜெலன்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர் என மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புடினுடன் நேரடியாக இதற்கு தயார்! ஜெலன்ஸ்கி அறிவிப்பு
"டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அமைதியான நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் பலர் கொல்லப்பட்டது பயங்கரமானது என ஜெலன்ஸ்கி கூறினார்.