இலங்கைக்கான புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை: உலக வங்கி தகவல்!
இலங்கையில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொருளாதார கொள்கையை உருவாக்கும் வரை புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என்று அமைப்பின் கடன் வழங்குநர் வியாழன்கிழமை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட பெரும் சரிவை தொடர்ந்து, தீவு நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களுக்கான மருந்து, சமையல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் பற்றாக்குறை ஆகியவற்றிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற பொதுமக்களின் கடுமையான ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார், மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அதன் நெருக்கடியின் மூல காரணங்களைச் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கைக்குரிய மேற்பார்வை நிறுவுவதற்கு இலங்கை அரசுடன் நெருக்கமாகச் செயல்படுவதாகவும் உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் மறுசீரமைக்கப்பட்ட பொருளாதார கொள்கையை இலங்கை அரசாங்கம் உருவாக்கும் வரை புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என்றும் அமைப்பின் கடன் வழங்குநர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஒன்பது வயது சிறுமி மர்மமான முறையில் குத்திக் கொலை:பிரித்தானியாவில் அரங்கேறிய கொடூரம்!
மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அவற்றால் மக்கள் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகியவை குறித்து உலக வங்கி குழு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.