ஒன்பது வயது சிறுமி மர்மமான முறையில் குத்திக் கொலை:பிரித்தானியாவில் அரங்கேறிய கொடூரம்!
பிரித்தானியாவில் உள்ள பாஸ்டனில் பகுதியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வியாழன் கிழமை 6:20 மணியளவில் லிங்கன்ஷையரின்(Lincolnshire) பாஸ்டனில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடப்பதாக ஃபவுண்டன் லேனில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து எத்தகைய தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில், லிங்கன்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ள தகவலில் சம்பந்தப்பட்ட பகுதியை நாங்கள் சுற்றி வளைத்துள்ளோம் மற்றும் நாங்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவரது குடும்பத்திற்கு சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரவளிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் முக்கிய நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: பரபரப்பு காட்சிகள்!
இதுத் தொடர்பாக பாஸ்டன் மற்றும் ஸ்கெக்னஸின் கன்சர்வேட்டிவ் எம்.பி மாட் வார்மன், போலீசார் விசாரணை செய்யும் போது ஊகங்களில் இருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.