இலங்கையில் கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தும் பணி தீவிரம்: வெளியான அறிவிப்பு
இலங்கையில் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நாலக்க கலுவெவ வெளியிட்ட தகவலில், 2026ம் ஆண்டுக்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதலாம் தர மாணவர்களின் 2ம் மற்றும் 3ம் தவணைக்குரிய பயிற்சி நூல்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 30ம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் நூல்கள் விநியோகம் செய்து முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு அனைத்து மாகாண ஆசிரியர்கள் மற்றும் பணிபாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பயிற்சிகள் அனைத்தும் மே 16ம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முதல் தவணைக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்யாத பாடசாலைகள் இருப்பினும், அவற்றை இரண்டாம் தவணையில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், நவீன கல்வி முறையை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |