இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க (76) அரசு நிதிகளை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளார்.
2019 முதல் 2024 வரை கடும் நெருக்கடியின்போது நாட்டை வழிநடத்திய ரணில், 2023-ல் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டனுக்கு சென்றபோது அரசு நிதிகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது அலுவலகம் இந்த பயணம் தனிப்பட்டது என்றும், மனைவியின் செலவுகளை அவர் தானே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தது.
ஆனால், விக்ரமசிங்க அரசு பணத்தை பயனச் செலவுகளுக்கும்,பாதுகாப்பு அதிகாரிகளுக்குமான செலவுகளுக்கும் பயன்படுத்தியதாக CID (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், விக்ரமசிங்க மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
விக்ரமசிங்க ஆதரவு தரப்பினர் இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ranil Wickremesinghe arrest, Sri Lanka corruption case, misuse of public funds Sri Lanka, Anura Kumara Dissanayake crackdown, Sri Lanka political news 2025, Wickremesinghe London trip scandal, Sri Lanka former president court