இலங்கை திரும்பியதும்... கோட்டாபய ராஜபக்சவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
நாட்டில் இருந்து வெளியேறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய் நாட்டிற்கு திரும்பியதும் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆக்கிரமிக்கும் அளவிற்கு தீவிரமடைந்ததை தொடர்ந்து, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.
மேலும் அங்கு இருந்தே தனது ராஜினாமா கடிதத்தையும் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இலங்கையின் ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த தகவலில், பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், எதிர்க் கட்சிகளான சமகி ஜன பலவேகயா மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என்று கோரியுள்ளதாக ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் (Strait Times) தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சீனாவை எதிரியாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்...பிரித்தானியாவிற்கு கடும் எச்சரிக்கை!
இதைப்போலவே கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக 2009ம் ஆண்டு செயல்பட்ட போது தமிழ் கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவத்தை கொண்டு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.