சீனாவை எதிரியாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்...பிரித்தானியாவிற்கு கடும் எச்சரிக்கை!
பிரித்தானிய அரசியல்வாதிகள் சீனாவை எதிரியாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மிக முக்கிய நாடாக சீனா வேகமாக முன்னேறி வரும் நிலையில், சீனாவின் வளர்ச்சி தங்களது நாட்டிற்கு மட்டும் இன்றி உலக அமைதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு உலக நாடுகள் சீனாவை குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், பிரித்தானியாவில் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிரித்தானியாவின் அடுத்த பிரமருக்கான போட்டியில் வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் ( Liz Truss) மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதியமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) ஆகிய இருவருக்கும் மத்தியில் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
இதுத் தொடர்பான பிரச்சாரத்தின் போது பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்த கருத்தில், சீனாவின் வளர்ந்து வரும் கெட்ட செல்வாக்கை எதிர்கொள்ள காமன்வெல்த் உடன் ஒத்துழைப்பேன் என தெரிவித்து இருந்தார்.
இதைப்போலவே மற்றொரு வேட்பாளரான கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும், சீனாவை பிரித்தானியா மற்றும் உலகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், வியாழன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பிரித்தானிய அரசியல்வாதிகள் சீனாவை எதிரியாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குழுக்களை உருவாக்கும், மோதல்களை துண்டுவதும் எப்போது வழிநடத்தாது என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 11 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு...இந்தியாவில் அறிமுகமாகும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம்
இதே சந்திப்பில், தெற்கு சீன கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல் குறித்து கருத்து தெரிவித்த ஜாவோ லிஜியன், தைவான் தொடர்பான இந்த பரபரப்பான சூழ்நிலையில் உலகின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைப்பது யார் என்றும் இந்த நிகழ்வு காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.