11 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு...இந்தியாவில் அறிமுகமாகும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம்
11 வருட காத்திருப்புக்கு பிறகு இந்தியாவில் கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வீயூ சேவையை புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயண வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள தெருக்களின் 360 டிகிரி காட்சிகளை வழங்கும் அம்சம், பல நாடுகளில் தனியுரிமை புகார்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகளை எதிர்கொண்டது.
அந்தவகையில் இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கடந்த 10 ஆண்டுகளாக குறைந்தபட்சம் இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்ட கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வீயூ அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் நிறுவனங்களின் உதவியுடன் தரவு சேகரிப்பில் கைகோர்த்து இருந்த கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து வந்த புதிய புவிசார் கொள்கையின் காரணமாக ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது என்று நிறுவனத்தின் நிர்வாகிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
மேலும் இது வெளிநாட்டு வரைபட ஆபரேட்டர்கள் இந்தியாவின் உள்ளூர் கூட்டாளர்களிடமிருந்து தரவை உரிமம் பெறுவதன் மூலம் பரந்த படங்களை வழங்க அனுமதிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பல லட்சம் டன் கோதுமை ஒப்பந்தம் ரத்து: உக்ரைனுக்கு எதிராக எகிப்து எடுத்துள்ள அதிரடி முடிவு
தனியுரிமைக் கவலைகளைத் தீர்க்க வீதிக் காட்சிப் படங்கள் தனிநபர்களின் முகங்களையும் உரிமத் தகடுகளையும் மங்கலாக்கும் என்று கூகுள் மேப்ஸ் அனுபவங்களின் துணைத் தலைவர் மிரியம் டேனியல் தெரிவித்துள்ளார்.