கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விசா நீட்டிப்பு!
இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் பயண அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் புதிய விசாவொன்றை வழங்கியுள்ளதாகவும், அவர் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரையில் மேலும் 14 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க அனுமதித்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மறைந்திருக்கவில்லை என்றும், சிங்கப்பூரில் இருந்து தீவு நாட்டிற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த ஒரு நாள் கழித்து, ராஜபக்சேவின் பயண அனுமதி நீட்டிப்பு குறித்த அறிக்கை வந்துள்ளது.
தனது அரசாங்கத்தின் பொருளாதார முறைகேடுகளுக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இருந்து தப்பிக்க ராஜபக்ச தனது நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மாலைதீவில் இருந்து தனிப்பட்ட பயணமாக ஜூலை 14 அன்று சிங்கப்பூர் சென்றார். ஜூலை 13-ஆம் திகதி முதலில் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற அவர், அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூர் சென்றார்.
ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் 14 நாட்களுக்கான பயண விசா வழங்கப்பட்டது, அந்த விசா முடிவடையவுள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு புதிய விசாவை சிங்கப்பூர் அளித்துள்ளது. அதன்படி, அவர் ஆகஸ்ட் 11 வரை அங்கு தங்கியிருக்கமுடியும்.