ஊவா மாகாணத்தை சூறையாடிய டித்வா சூறாவளி: அரசு ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு
இலங்கையின் அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மாகாணத்தின் மறுகட்டமைப்புக்காக நன்கொடையாக வழங்க தீர்மானம் செய்துள்ளனர்.
ஊவா மாகாண சபையின் அரசு ஊழியர்கள் தங்கள் மாகாணத்தின் மறுகட்டமைப்புக்காக தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இது தொடர்பாக தெரிவித்த தகவலில், மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசு அதிகாரிகளுக்கு இது தொடர்பான தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |