இலங்கையில் பிரித்தானியருடன் மரணமடைந்த இரண்டாவது நபரின் தகவல் வெளியாகியுள்ளது
இலங்கை விடுதியில் பிரித்தானியருடன் மரணமடைந்த இரண்டாவது சுற்றுலாப் பயணி தொடர்பில், அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோசமாக நோய்வாய்ப்பட்டனர்
இந்த துயர சம்பவத்திற்கு பின்னால் நச்சுத்தன்மை வாய்ந்த புகையூட்டல் இரசாயனங்கள் காரணமா என்பது தொடர்பில் பொலிசார் விசாரிக்கின்றனர்.
ஜேர்மானியரான 26 வயது Nadine Raguse மற்றும் பிரித்தானியரான 24 வயது Ebony McIntosh ஆகிய இருவரும் மிராக்கிள் கொழும்பு சிட்டி விடுதியில் தங்கியிருந்த போது மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டனர்.
இந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அந்தப் பெண்கள் கடுமையான வாந்தி, குமட்டல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. சுற்றுலாப் பயணிகள் இருவரும் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, விடுதியில் உள்ள ஒரு அறையில் படுக்கைப் பூச்சிகளுக்காக புகையூட்டப்பட்டதாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
உடல் பிரேத பரிசோதனை
இலங்கையில் இருந்து வரும் தகவல்களில், எபோனி தங்கியிருந்த அறையின் அருகில் உள்ள ஒரு அறை ஜனவரி 30 ஆம் திகதி புகையூட்டப்பட்டு, சுமார் 72 மணி நேரம் பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 10 ஆம் திகதி அவரது குடும்பத்தினர் இலங்கை சென்ற பிறகு எபோனியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இருவர் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துள்ள நிலையில், விரிவான விசாரணைக்காக தற்போது அந்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |