இந்தியா - மாலத்தீவு மோதலால் பணம் சம்பாதிக்கும் இலங்கை! எதில் தெரியுமா?
இந்தியா - மாலத்தீவு இடையிலான மோதலால் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து பணம் சம்பாதித்து வருகிறது.
இந்தியா - மாலத்தீவு மோதல்
இந்தியா மற்றும் மாலத்தீவு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக மாலத்தீவின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையையே நம்பி இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்கள் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2021 -ம் ஆண்டில் 2.9 லட்சம் இந்தியர்களும், 2022 -ம் ஆண்டில் 2.4 லட்சம் இந்தியர்களும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளில் சுமார் 23 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அந்த அளவுக்கு இந்தியர்கள் அதிகமானோர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள்! AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும் பாசப் போராட்டம்
ஆனால், தற்போது இந்தியா மற்றும் மாலத்தீவு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை குறைத்துவிட்டனர்.
இலங்கைக்கு பலன்
இந்நிலையில், இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்வதை குறைத்துவிட்டு அண்டை நாடான இலங்கைக்கு அதிகளவில் சென்று வருகின்றனர்.
அதோடு, இலங்கையில் அதிக பணம் செலவு செய்து வருவதால் அங்கு 2022 -ம் ஆண்டை விட 2023 -ம் ஆண்டில் சுற்றுலா சென்ற பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதாவது, இலங்கைக்கு 2022 -ம் ஆண்டில் 1.23 லட்சம் இந்தியர்கள் சென்று வந்த நிலையில், 2023 -ம் ஆண்டில் 3 லட்சம் பேர் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக நடப்பாண்டில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவார்கள் என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில், "இந்தியா - மாலத்தீவு விவகாரத்தால் இலங்கை பயன் அடைந்துள்ளது. இதனால், பொருளாதார அளவிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |