47 வயதிலும் கேப்டனாக மிரட்டும் குமார் சங்ககாரா! இலங்கை மாஸ்டர்ஸ் மிரட்டல் வெற்றி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
குமார் சங்ககாரா
வதோதராவில் நடந்த போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் தரங்கா 1 ரன்னில் வெளியேற, திரிமன்னேவை 14 ஓட்டங்களில் நர்ஸ் வெளியேற்றினார்.
ஆனால், அணித்தலைவர் குமார் சங்ககாரா (Kumar Sangakkara) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அசேல குணரத்னே அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
இதன்மூலம் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சங்ககாரா 42 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குணரத்னே 45 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்.
இலங்கை மாஸ்டர்ஸ் வெற்றி
இலங்கை மாஸ்டர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் குவித்தது. ஆஸ்லே நர்ஸ் 3 விக்கெட்டுகளும், பெஸ்ட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அதிபட்சமாக டிவைன் ஸ்மித் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார். லென்டல் சிம்மோன்ஸ் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
குமார் சங்ககாரா தலைமையில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |