கூகுள் மேப்பில் புதிய அம்சங்கள்! இலங்கை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையின் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google maps A மற்றும் B புதுப்பிக்கப்பட்ட இருப்பதாக அந்நாட்டின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், கூகிள் மேப்ஸ் 12,000 கிலோமீட்டர் முக்கிய வீதிகளில் நிகழ்நேர தகவல்களை புதுப்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மேம்படுத்துதல் மூலம், பயணிகள் சாலைகளில் உள்ள போக்குவரத்து, கட்டுமான அறிவிப்புகள் மற்றும் பாதை மூடல்கள் உட்பட 6 வகையான சாலை நிலை எச்சரிக்கைகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் மக்களின் பயண தாமதங்களை குறைத்து எதிர்பாராத நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 31ம் திகதி இது முன்னோடி திட்டமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கூகிள் மேப்ஸ் புதிய மேம்படுத்தல்களை பொதுமக்கள் பார்க்கவும், அதை பயன்படுத்தவும் அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |