ஈழத் தமிழர் மனித புதை குழிகளுக்கு மேல் புத்த விகாரையா? துரைராசா ரவிகரன் விளக்கம்
இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் இருந்து மனித உடலங்கள் அடங்கிய புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித புதைக்குழி
இலங்கையின் முல்லை தீவின் கொக்குழாய் என அழைக்கப்படும் பகுதியில் இருந்து மனித உடல் எச்சங்கள் அடங்கிய புதிய புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 29ம் திகதி நீர் வழங்கல் வடிகால் சபை-யால் அப்பகுதி மக்களுக்கு நீர்வளங்களை வழங்குவதற்காக குழிகள் வெட்டும் போது இந்த மனித எச்சங்கள் அடங்கிய புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகளில் இருந்து சிதைந்த எலும்புகள், விடுதலை புலிகளின் ஆடைகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ஐபிசி-யின் மெய்ப்பொருள் காண் நிகழ்ச்சியில் நெறியாளர் தாட்சாயணி உடன் இலங்கையின் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |