இலங்கையின் மிதக்கும் சந்தை: 312 மில்லியன் ரூபாய் வீணாகப்போனதா! மக்கள் வேதனை
இலங்கையின் கொழும்புவில் Bastian Mawatha-வில் அமைந்துள்ள மிதக்கும் சந்தையின் தற்போதைய நிலை மிகவும் மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
மிதக்கும் சந்தை
இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் Pettah-வில் உள்ள Bastian Mawatha-வில் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி மிதக்கும் சந்தை-யை அப்போதைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார்.
இந்த மிதக்கும் சந்தை திட்டத்தின் கீழ் பெய்ரா ஏரியில் படகுகளில் சுமார் 92 வர்த்தக கடைகள், வணிக ஸ்டால்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 312 மில்லியன் செலவில் இந்த மிதக்கும் சந்தை கட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை
ஆனால் இந்த மிதக்கும் சந்தை தற்போது தன்னுடைய கவரும் வசீகரத்தை இழந்துள்ளது, அத்துடன் இவற்றில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கடைகள் உபயோகிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன.
மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் சற்று அதிகமாக இருப்பதால் மக்கள் இங்கு பொருட்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
312 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மிதக்கும் சந்தையில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும், இங்கு சரியான நல்ல உணவகங்கள் கூட இல்லை என்றும் மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் மிதக்கும் சந்தை குறித்து கூடுதல் தகவல்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்வையிடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |