சுவிட்சர்லாந்தில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த ஈழத்தமிழர்
ஈழத்தமிழர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் பெருந்தொகையில் பணத்தை மோசடி செய்த சம்பவம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பண மோசடி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள கும்பல் ஒன்று சுற்றுலா சேவைகள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி உண்டியல் முறையில் பெருந்தொகையை மோசடி செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர், சங்கர் என்ற பெயரில் பாரிஸ் நகரத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் உண்டியல் முறை மூலம் 3000 யூரோக்களை கொடுத்து இலங்கைக்கு பணம் அனுப்பிய சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்த பணமானது அழகு கலை நிலைய உரிமையாளர் கணக்கில் இருந்து செங்கலடியில் உள்ள நபர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு இருப்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சங்கர் என்ற நபர் பல்வேறு நபர்களிடம் பழகி பல்வேறு மோசடிகளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த கும்பல் இலங்கையில் இருந்து ஐரோப்பிற்கு நாடு கடத்துவதாக கூறியும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கும்பலினால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் முக்கிய விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார், அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |