இலங்கையில் புதிய ரூ.2000 நாணயத்தாள் அறிமுகம்: மக்கள் புழக்கத்திற்கு எப்போது வெளிவரும்?
இலங்கையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய 2000 ரூபாய் நோட்டுகள்
இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்ட அறிவிப்பில், சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள், படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்திற்கு வெளியே விடப்படும் என தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் திகதி மத்திய வங்கி அதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த ரூ.2000 நினைவுத் தாளை வெளியிட்டது.
தயாராகும் வங்கிகள்
இந்நிலையில் உரிமம் பெற்ற வங்கிகள் பணத்தை கையாளுவதற்காக தங்கள் பண இயந்திரங்களில் புதிய ரூபாய் தாளுக்கு ஏற்றவாறான மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இந்த நடைமுறைகளின் வேகத்தை பொறுத்து, புதிய ரூபாய் 2000 நாணயத் தாளை படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அளவுத்திருத்த செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் வங்கிகள் மூலம் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கப்பெறும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |