விசாரணை வலையில் மைத்திரி - கோட்டாபய! முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் கசிந்த ரகசியம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான சிறிசேனவும், ராஜபக்சவும் எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது மக்களின் மனநிலையை ஆராயும் அரசு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மனநிலை மற்றும் கருத்துக்களை அரசாங்கம் உற்று நோக்கி வருகிறது.
இது வரையிலான நிலையில், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதாக இலங்கை அரசாங்கத்திற்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளது.
விசாரணை வலையில் மைத்திரி - கோட்டாபய!
இந்நிலையில், கடத்தல் தொடர்பிலான வழக்கில் கோட்டாபய ராஜபக்சவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனால், எதிர்வரும் நாட்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் விசாரணைக்காக கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |