வெள்ளை தலையணையில் “110, 625” எண்கள்! 30 மணி நேரம் ஹோட்டல் அறைக்குள் தவித்த பெண்: மீட்கப்பட்டாரா?
சீனாவில் ஹோட்டல் அறையில் 30 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டிருந்த பெண், டெலிவரி ஊழியரின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பியுள்ளார்.
டெலிவரி ஊழியரின் துரித நடவடிக்கை
ஆகஸ்ட் 12ம் திகதி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரியும் ஜாங் என்ற மாணவர், டெலிவரிக்கு செல்லும் வழியில் வெள்ளை நிற தலையணையில் “110” மற்றும் “625” என்ற எண்கள் இரத்தத்தில் எழுதப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சீனாவில் 110 என்ற அவசர சேவைக்கான அழைப்பு எண் என்பதை உணர்ந்து கொண்ட ஜாங் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கண்டெடுக்கப்பட்ட வெள்ளை நிற தலையணை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
ஆரம்பத்தில் கடத்தல் மற்றும் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட பொலிஸார், தலையணையில் குறிப்பிடப்பட்ட ஹோட்டல் அறையை அதிக எச்சரிக்கையுடன் அணுகினர்.
அறையின் கதவை தட்டிய போது யாரும் பதிலளிக்காததை தொடர்ந்து, பொலிஸார் அவற்றை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.
In Leshan, Sichuan Province, a woman was trapped in an apartment for 30 hours after a gust of wind slammed the door shut, leaving her phone outside. Desperate, she bit her finger to write “110 625” on a pillow—110 is China’s police emergency number—and threw it out the window. A… pic.twitter.com/9OmSTZkV7F
— China Focus (@China__Focus) August 19, 2025
அப்போது ஹோட்டல் உரிமையாளர் ஷோ அங்குள்ள படுக்கையறையில் சிக்கி கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
30 மணி நேரம் ஹோட்டல் அறைக்குள் தவித்த பெண்
சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையை சுத்தம் செய்வதற்காக சென்ற போது எதிர்பாராத விதமாக கதவு அடைத்து கொண்டதன் மூலம் கிட்டத்தட்ட 30 மணி நேரம் உணவு, தண்ணீர் மற்றும் கழிவறை என்று எதுவுமே இல்லாமல் தவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஆடைகளை வெளியே தூக்கியெறிந்து உதவி கேட்டும் பலனளிக்காததை அடுத்து, தன்னுடைய கை விரலை கடித்து இரத்தத்தால் உதவி கேட்டு தலையணையை வெளியே வீசியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக மாணவர் ஜாங் தலையணை பார்த்ததும் துரிதமாக செயல்பட்டு ஷோவின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
ஜாங்கின் இந்த உதவிக்கு ஈடாக அவருக்கு ஹோட்டல் உரிமையாளர் ஷோ 1000 யுவான் வழங்கிய நிலையில், அதனை ஜாங் ஏற்க மறுத்துவிட்டார்.
ஜாங்கின் இந்த செயல் சீனாவின் சமூக ஊடகத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |