உலகின் மிகவும் சக்திவாய்ந்த XQ-58Valkyrie ட்ரோன்! பைட்டர் ஜெட் விமானத்திற்கு மாற்றா?
வான்வழி தாக்குதலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் XQ-58Valkyrie என்ற தாக்குதல் டிரோன் உருவாக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் உருவாக்கப்படும் இந்த டிரோன்கள் எதிர்கால வான்வழி தாக்குதலை நிர்ணயிக்கும் காரணிகளாக உருவெடுத்துள்ளது.
XQ-58Valkyrie அறிமுகம்
க்ரோடோஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தால் இந்த XQ-58Valkyrie ஆளில்லா தாக்குதல் டிரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த XQ-58Valkyrie டிரோன் F-35 போன்ற முன்னணி போர் விமானங்களுக்கு நம்பகமான விங்க்மேனாக செயல்பட உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த XQ-58Valkyrie மணிக்கு 650 மைல் வேகத்தை எட்டுவதோடு, சுமார் 4,800 கிமீ தூரம் பறக்கும் திறனையும் கொண்டுள்ளது.
இத்தகைய சக்திவாய்ந்த XQ-58Valkyrie டிரோன்களை தற்போது அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
XQ-58Valkyrie விலை மற்றும் பணி திறன்
செயற்கை நுண்ணறிவு(AI) திறன்களுடன் வடிவமைக்கப்படும் இந்த XQ-58Valkyrie ட்ரோனின் விலை $4 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் $6 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க கூடும் என தெரியவந்துள்ளது.
ஓடுபாதையின் மூலம் ஏவப்பட்டு பாராசூட் உதவியுடன் தரையிறங்கும் இந்த ட்ரோன் தனித்தும், விமானியின் கட்டுப்பாட்டிற்கு கீழும் இயங்கும் திறன் கொண்டுள்ளது.
ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்த ட்ரோன், எதிரிகளின் நிலைகளை கண்டறிவது, சிக்னல்களை தடுப்பது மற்றும் இலக்குகளை தகர்ப்பது போன்ற பல பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பைட்டர் ஜெட் விமானத்திற்கு மாற்றா?
XQ-58Valkyrie அதிக தொழில்நுட்ப திறனுடன் வடிவமைக்கப்பட்டாலும், இவை பைட்டர் ஜெட் விமானங்களுக்கு முழுமையான மாற்றாக அமையாது.
மாறாக மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கடினமான பணிகளுக்கு இவற்றின் சேவைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |