சீனாவிற்கு ஒரு லட்சம் குரங்குகள் ஏற்றுமதி; திட்டத்தை கைவிட்டது இலங்கை
சீனாவிற்கு டோக் மக்காக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இலங்கை கைவிடுகிறது.
100,000 குரங்குகள்- திட்டத்தை கைவிட்டது இலங்கை
அழிந்து வரும் 100,000 டோக் மக்காக்குகளை (toque macaques) சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இலங்கை கைவிட்டுள்ளது. சீன தனியார் நிறுவனம் ஒன்றின் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
டோக் மக்காக் குரங்குகளை சீனாவில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு, சீனா குரங்குகளை உயிரியல் பூங்காக்களுக்குப் பதிலாக ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நீதிமன்றத்தை அணுகியது.
Reuters
ஜூலை 6-ஆம் திகதி மீண்டும் விசாரணை
இந்த விடயம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய மாட்டோம் என இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் உறுதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டார். இந்த மனு ஜூலை 6-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் கூற்றுப்படி, டாக் மக்காக் குரங்குகள் அழிந்து வரும் இனமாகும். விலங்குகள் வாங்குவதற்கும் விற்கப்படுவதற்குமான பொருட்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் முடிவு என்று PETA தெரிவித்துள்ளது.
Getty Images
சீனா இலங்கையிடம் விடுத்த கோரிக்கை
இலங்கையில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களில் மக்காக் குரங்குகளை இனப்பெருக்கம் செய்யுமாறு சீனா இலங்கையிடம் கோரிக்கை விடுத்தது.
சுமார் 10,0000 குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். இந்த வகை குரங்குகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகம் என அவர் கூறினார். குரங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக கூறியிருந்தார்.
Sri Lanka, Monkey export, Toque Macaque monkeys, China
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |