வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி... பயத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்: கசிந்த பின்னணி
பலம் பொருந்திய வாக்னர் கூலிப்படை, தமக்கு ஆதரவளித்துவந்த விளாடிமிர் புடினுக்கு எதிராகவே கிளர்ச்சியில் இறங்கியுள்ளது சீன ஜனாதிபதிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எதிர்பாராத ஆயுதக் கிளர்ச்சி
கடந்த சனிக்கிழமை வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் எந்த மோதலும் இன்றி Rostov-on-Don என்ற நகரத்தை கைப்பற்றினார். தொடர்ந்து தலைநர் மாஸ்கோவுக்கு வாக்னர் கூலிப்படையினர் முன்னேறினர்.
@reuters
ஆனால் தலைநகருக்கு சுமார் 120 மைல்கள் தொலைவில் வைத்து விளாடிமிர் புடினுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, கிளர்ச்சியை கைவிட்டுள்ளனர். மொத்த ரஷ்யாவையும் இரும்புக்கரம் கொண்டு ஆளும் விளாடிமிர் புடினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது வாக்னர் கூலிப்படையின் எதிர்பாராத ஆயுதக் கிளர்ச்சி.
இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் இந்த ஆயுதக் கிளர்ச்சியானது சீன ஜனாதிபதிக்கு உண்மையான பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக மைக் பாம்பியோவின் முன்னாள் சீனக் கொள்கை ஆலோசகரான Miles Yu தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு சிக்கல் சீனாவில் எதிரொலிக்கலாம் என ஜி ஜின்பிங் கருதுவதாக Miles Yu குறிப்பிட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது என்கிறார் Miles Yu.
@getty
ஜி ஜின்பிங் ஆட்சிக்கு எதிராக
வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சியானது மிகவும் செல்வாக்கற்ற ஆட்சிக்கு மாற்று இருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே சீனாவை மிகவும் பயப்பட வைத்துள்ளது என்கிறார் Miles Yu.
வாக்னர் கூலிப்படை போன்று, ஜி ஜின்பிங் ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி உருவாகலாம் என்ற அச்சமே அவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது என்கிறார்.
மட்டுமின்றி, 11 ஆண்டுகள் நீண்ட ஆட்சியில் ஜி ஜின்பிங் பல்வேறு ராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் கீழ் செயல்பட்ட பெரும்பான்மையான ராணுவ தலைவர்களை ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார் எனவும் Miles Yu தெரிவிக்கிறார்.
@AP
இதனாலையே, கிம் ஜோங் உன் போன்று மிகப்பெரிய பாதுகாப்பு வட்டத்தில் ஜி ஜின்பிங் சீனாவுக்குள் வலம் வருகிறார். இந்த வாக்னர் கிளர்ச்சி சீனத் தலைமையையும் உண்மையில் பயமுறுத்தியுள்ளது, மட்டுமின்றி அரசியல் பொறுப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகலாம் எனவும் அஞ்சுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |