இலங்கையில் வெடித்த வன்முறை: ரத்கம பகுதியில் துப்பாக்கி சூடு
இலங்கையின் ரத்கம பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் கடுமையான விலையேற்றத்தை தொடர்ந்து, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என அனைவரும் பதவி விலகவேண்டும் என மக்கள் போராடங்களில் குதித்தனர்.
இந்த போராட்டமானது நேற்று வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகிய போதிலும், அவரது குடும்பத்தின் வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மேலும் இலங்கையின் ஆளும் கட்சி எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன்-ரஷ்யா போர்: உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுபாடு
இந்தநிலையில், தற்போது ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் நடைப்பெற்ற வன்முறை சம்பவத்தில், தூப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தபட்டு இருப்பதாகவும், அதில் 4 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.