இலங்கையின் புதிய பிரதமர் சஜித் பிரேமதாச...எதிர்க்கட்சிகள் ஒருமனதாக பரிந்துரை
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (sjb) நாட்டின் இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதாசவை ஒருமனதாக பரிந்துரைக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இந்தநிலையில் இலங்கையின் அடுத்த இடைகால பிரதமராக சஜித் பிரேமதாசவை நியமிக்க, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய ஒருமனதாக முடிவு செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பான அறிக்கையை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்பித்தாகவும், அதனை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியதாகவும் எஸ்.ஜே.பி தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் வெற்றிபெற 113 எம்.பிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், SJB கட்சி 50 உறுப்பினர்கள் வரை கொண்டுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஜனாதிபதி இலங்கையிலேயே உள்ளார்...கருத்தை திரும்ப பெற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா!
இந்நிலையில், நாட்டை ஸ்திரப்படுத்தவும், பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும், அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக ஊடகங்களுக்கு சஜித் பிரேமதாச தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.