அம்பேத்கர் அரசியலை கையில் எடுக்கும் இலங்கை! மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி கருத்து
இலங்கையில் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடங்கி இலங்கையில் தமிழ் குடியிருப்பு பகுதிகளில் புத்த விகாரைகளை அமைக்க கோரி போராடும் தமிழ் அமைப்புகள் கையில் இருக்கும் அம்பேத்கரின் புகைப்படம் வரை உள்ள பல முரண்களுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி IBC நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
அம்பேத்கர் அரசியலை கையில் எடுக்கும் இலங்கை
இலங்கையில் தற்போது சிக்கலாகி கொண்டு வரும் விவகாரங்களில் முக்கியமானது என்னவென்றால் தமிழ் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள், அதைபோல புத்த விகாரைகளின் அதிகமான ஆக்கிரமிப்பு இதற்கு சில தமிழ் அமைப்புகளே ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு போராட்டம் நடத்தும் நபர்களின் கையில் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்து இருக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தமிழீழம், தமிழ் தேசியம் சார்ந்து பேசுபவர்கள் ஆகியோர் புத்தரையும், அம்பேத்கரையும் சேர்த்து இரு கண்களாக பாவிக்கின்றனர், இந்த முரணை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இதுபோன்று IBC நெறியாளர் தாட்சாயணி எழுப்பிய பல கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய நேர்காணலில் பதிலளித்துள்ளார், அது தொடர்பான முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |