இலங்கையின் அனைத்து முயற்சிக்கும் ஆதரவு வழங்குவோம்: முதல் நாடாக இந்தியா மேற்கொண்ட செயல்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு வழங்கும் என இந்தியா தெரிவித்துள்ளது.
ஆற்றல் கண்காட்சி 2023
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானம், மின்சாரம், ஆற்றல் கண்காட்சி- 2023 நடைபெற்றது.
இதில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் வினோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டு முக்கிய உரை ஒன்றை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவித்தார்.
Photo:Sanjay.K.Sharma
அத்துடன் இலங்கைக்கு தேவையான ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொள்ள மற்ற நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தனது பணியை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்)இலங்கைக்கு தேவையான நிதியுதவி மற்றும் கடன் மறு கட்டமைப்புக்கான செயல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் ஆதரவு தேவைப்படும்.
இந்நிலையில் இலங்கைக்கு தேவையான இந்த ஆதரவை இந்தியா முதல் நாடாக வழங்கியுள்ளது. மேலும் 400 கோடி டாலர் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது, இது ஐஎம்எஃப் இலங்கைக்கு வழங்கும் உதவியை விட கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு கடந்த ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த சுற்றுப் பயணத்தை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கபட்டன.
அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |