இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா! வருகை தந்ததில் முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
1.98 லட்சம் பேர்
இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதன் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளதாக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஆகத்து 2025 இறுதியில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது 46,473 பேர் வருகை தந்துள்ளனர். இது மூன்றில் ஒரு பங்காகும்.
இந்தியாவிற்கு அடுத்து சர்வதேச நாடுகளும் இலங்கை சுற்றுலா வளர்ச்சியில் பங்களிப்பு செய்துள்ளன.
பிரித்தானியாவில் இருந்து 17,764 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 12,500 பயணிகளும் இலங்கைக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் பிரபலமான இலங்கை
இதன்மூலம் ஐரோப்பிய கண்டத்தில் இலங்கை ஒரு பிரபலமான பயணத் தலமாக உள்ளது என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இவற்றைத் தவிர சீனா, ஜப்பான், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அடங்கும்.
முந்தைய ஆண்டை விட ஆகத்து 2025 மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |