சிகிரியா குன்று பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!
ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தல நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ளது.
இலங்கை ஏராளமான சுற்றுலா இடங்களுக்கு பெயர் பெற்றது.
குறிப்பாக கலாசாரங்கள் முதல் இயற்கை அழகு, சாகச நடவடிக்கைகள் மற்றும் அழகான கடற்கரைகள் வரை அனைத்தையும் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் சிகிரியா இலங்கையின் தனித்துவமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும். யுனெஸ்கோவால் உலக கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அந்த சிசிரியா குன்று பற்றி விரிவாக பார்க்கலாம்.
"சிகிரியா" என்ற வார்த்தைக்கு "சிங்கப்பாறை" என்று பொருள். இந்த குன்று கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் உயரத்தில் உள்ளது. இதை 1ம் காசியப்பன் மன்னன் கட்டினார்.
சிகிரியாவைச் சுற்றி அழகிய தோட்டங்கள் அமைக்கப்பட்டன மற்றும் நீரூற்றுகள் கட்டப்பட்டன, அவை உலகின் முதல் ஒன்றாகக் கருதப்பட்டன.
சிகிரியா கடல் மட்டத்திலிருந்து 370 மீட்டர் உயரத்திலும், சுற்றியுள்ள பாலைவன சமவெளியைச் சுற்றி 170 மீட்டர் உயரத்திலும் உள்ளது. இந்த சிங்க பாறையின் பரப்பளவு 1.5 ஹெக்டேர்.
இந்த குன்றில் பல இடங்கள் காணப்படுகின்றன. அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
கண்ணாடிச் சுவர்
சிகிரியாவில் காணப்படும் சிறப்புமிக்க நிர்மாணிப்பாக கண்ணாடிச்சுவர் காணப்படுகின்றது. இதில் எழுத்துருக்கள் மற்றும் இலங்கையின் எழுத்தாக்கத் துறை வரலாற்றின் சிறப்பு இருகின்றது. இது சிகிரியா பற்றிய பல தகவல்களை தெரியப்படுத்துகின்றது. 500 பெண்களின் உருவங்களை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிகிரியா ஓவியம்
500க்கும் மேற்பட்ட குகை ஓவியங்கள் கண்ணாடி போன்ற பளிங்குகளில் வரையப்பட்டுள்ளன. இவை இயற்கையாக கிடைக்கும் தேன், சாம்பல் மற்றும் மரப்பட்டைகளை கொண்டு வரையப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ் ஓவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருக்கும் அஜந்தா ஓவியத்தின் இயல்புகளை கொண்டுள்ளதோடு, சிகிரியா ஓவியத்தில் இருக்கும் பெண்கள் ராவணன் காலத்தில் பணி புரியும் பெண்கள் எனவும் கூறப்படுகின்றது.
நீர்ப்பாசண முறை
இங்கு 90x68x7 அடி பரிமாணத்தைக்கொண்ட ஓர் குளம் உள்ளது. இக்குளமானது கோடைக் காலத்தில் வற்றிப்போகாமலும் மழைக்காலத்தில் நிரம்பி வழியாமலும் இருக்கும். மேலும் அதன் வாயில்களில் பல சிறு குளங்கள் அமைந்துள்ளன. இதற்கு தேவையான நீர் சிகிரியாவிற்கு அருகாமையில் இருக்கும், ‘வாவ’ என்ற ஏரியிலிருந்து பெறப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |