ஒரு கிலோ கேரட் ரூ.2200 - வரலாறு காணாத அளவில் உயரும் காய்கறி விலை
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு காய்கறிகளின் விலைகள் அண்மை நாட்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கப்பட்ட காய்கறி விலை
இலங்கை வாழ் மக்கள் ஒரு காலத்தில் காய்கறிகளை உண்பது கனவாகி விடுமளவிற்கு காய்கறிகளின் விலையானது அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை இரண்டாயிரம் ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சியின் விலை 1000 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 800 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன.
இதனால் பொது மக்கள் உள்ளிட்ட பல வியாபாரிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கப்பட்டுள்ள விலைகளில் மக்கள் காய்கறிகளை வாங்க விரும்புவதில்லை எனவும் இதனால் நாளாந்தம் சந்தைக்கு வரும் காய்கறிகள் வெறுமனே அழுகி வீணாவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக அனைத்து காய்கறிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் மக்களால் காய்கறிகளை உண்ண முடியாது. மலையகம் மாத்திரமின்றி வடக்கி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே, காய்கறிகளின் விலை இந்த தடவை இவ்வாறாக அதிகரித்துள்ளன.
மேலும் இந்நிலை காரணமாக சிறு விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக இலங்கை பேலியகொட மத்திய சந்தையின் துணைத் தலைவர் ஜி.பி. பிரபத் சுசந்த லங்காசிறி செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |