இலங்கை 531 ஓட்டங்கள் முன்னிலை! துரத்தி பிடிக்குமா வங்கதேச அணி!
வங்கதேச அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளில் இலங்கை அணி 531 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மிரட்டிய இலங்கை அணி
இலங்கை-வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜாஹுர் அகமது சௌத்ரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
Three 50+ scores from the top order batsmen and Sri Lanka end day one on 314/4. #BANvSL pic.twitter.com/pU5BueYEmf
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 30, 2024
திமுத் கருணாரத்ன 129 பந்துகளில் 86 ஓட்டங்களும், குசல் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி 150 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்து இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம்
வலுவான நிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் தனஞ்சய டி சில்வா சிறப்பாக விளையாடி 70 ஓட்டங்கள் குவித்தார், தினேஷ் சந்திமால் தன்னுடைய பங்கிற்கு 59 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் இலங்கை அணி 159 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய ஓட்டத்தை அடைந்தது.
அத்துடன் வங்கதேச அணியை விட 531 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி உள்ளது.
WORLD RECORD: Sri Lanka make 531 in 2nd Test against Bangladesh, without an individual century maker.
— Test Match Special (@bbctms) March 31, 2024
It’s the highest Test total without a player making a hundred.https://t.co/TjxxRaMGuP#bbccricket #BANvSL pic.twitter.com/N5v6hDNTyL
களமிறங்கிய வங்கதேசம்
2ம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 11 ஓவர்களை எதிர்கொண்டு 45 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மஹ்முதுல் ஹசன் ஜாய் 20 ஓட்டங்களுடனும், ஜாகிர் ஹசன் 23 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |